top of page

இந்த பதிவில் முதலில் துளசி மாலையின் சிறப்பு பலனை பற்றி முதலில் தெரிந்து கொள்ளலாம். துளசிச் செடியின் அடி பக்கத்தில் இருந்து எடுக்கக்கூடிய மரக்கட்டையில் இருந்து செய்யக் கூடியது தான் துளசி மாலை. துளசிச் செடியின் சின்ன சிறிய மரத் துண்டுகளை வைத்து தயாரிக்கப்படுவதே உண்மையான துளசி மாலை ஆகும். இந்த மாலையை நாம் அணிந்து கொண்டால் வெற்றி நம்மை தேடி வரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதோடு மட்டுமல்லாமல் இயற்கையாகவே இந்த துளசிமாலையானது நம்முடைய உடலின் குளிர்ச்சியையும், சூட்டையும் சம நிலையில் வைத்திருக்கும்.

நீங்கள் கடையில் இருந்து புதியதாக வாங்கி வரப்பட்ட துளசி மாலையாக இருந்தால், அதை அப்படியே கழுத்தில் அணிந்து கொள்ளக் கூடாது. முதலில் மஞ்சள் தண்ணீரில் அதை நன்றாக ஊற வைக்கவேண்டும். மஞ்சளை தண்ணீரில் நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு துளசி மாலையை, இரண்டு மணிநேரம் அந்த மஞ்சள் தண்ணீரில் ஊறவைத்து, அதன் பின்பு நல்ல தண்ணீரில் போட்டு கழுவி, அதன் பின்பு உங்கள் வீட்டு பூஜை அறையில் பெருமாள் படத்திற்கு அல்லது மகாலட்சுமி படத்திற்கு சாத்திவிட்டு இறைவனை நன்றாக வேண்டிக் கொண்டு அதன் பின்பு துளசி மாலையை கழுத்தில் அணிந்து கொள்வதுதான் சரியான முறை

  • துளசி மாலை அணிபவருக்கு மிக அரிதாகவே நோய் வரும். துளசி மாலை அணிந்தவர் புகழ், புகழ் மற்றும் செழிப்பு ஆகியவற்றுடன் ஆசீர்வதிக்கப்படுகிறார்.
  • துளசியில் மருத்துவ குணம் உள்ளது, இதை அணிபவருக்கு தலைவலி, சளி, காய்ச்சல், தோல் நோய்கள் வராது. யாருக்காவது இந்த நோய்கள் இருந்தால், அதை அணிவது நோயாளிக்கு மிகுந்த பலனைத் தரும்.
  • சாஸ்திரங்களின்படி, துளசி மாலை அணிபவருக்கு அகால மரணமோ அல்லது தீங்கு விளைவிக்கும் நோயோ ஏற்படாது என்று நம்பப்படுகிறது.
  • புராணங்களின்படி, உணவு உட்கொள்ளும் போது உடலில் துளசி மாலை இருந்தால், அந்த நபர் பல முறை யாகம் செய்த புண்ணியத்தைப் பெறுவார் என்றும் நம்பப்படுகிறது.
  •  

     

     

    துளசி மாலையை திங்கள், புதன், வியாழன் ஆகிய நட்சத்திர நாட்களில் கங்கை நீரால் சுத்திகரித்து அணிய வேண்டும்.

Thulasi Malai

₹250.00Price
Quantity
    bottom of page