top of page

மருத்துவப் பயன்கள்

  • மூக்கிரட்டை செடி, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளின் கழிவுகளை, முழுவதும் வெளியேற்றி, மனிதர்களின் உடல் நலம் காக்கும் வல்லமை பெற்றதாகத் திகழ்கிறது.
  • மூக்கிரட்டை உடலுக்குள் செல்லும்போது அங்கே வாத வியாதிகள் எல்லாம் அடங்கி, வாதம் உடலில் சீராகும். இரத்த சோகையால் ஏற்படும் உடல் வீக்கம், மூச்சிரைப்பைப் போக்கவும், கல்லீரல், மஞ்சள் காமாலை பாதித்தவர்களின் வயிற்று உப்புசம் குறைத்து நச்சு நீர் வெளியேறவும், மூக்கிரட்டை உதவி செய்யும்.
  • புற்று நோய், புற்று வியாதிகளை ஏற்படுத்தும் நச்சுக் கிருமிகளை அழிக்கும். தொற்று வியாதிகளின் பாதிப்பை சரி செய்யும். உடல் திசுக்களை சரி செய்து, உடலில் ஏற்படும் முதுமைத் தன்மையை போக்கி, உடல் இளமையான தோற்றத்தை ஏற்படுத்தும்
  • மூளைக்கு ஆற்றலை அளித்து, உடலுக்கு சுறுசுறுப்பையும், மனதிற்கு உற்சாகத்தையும் உண்டாக்கும்.
  • மூக்கிரட்டை இலைகள், பொன்னாங்கன்னி இலைகள் மற்றும் கீழாநெல்லி இலைகள் ஆகியவற்றை ஒரே அளவில் எடுத்து அவற்றை நன்கு அரைத்து சிறிதளவு மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வர மங்கலான பார்வை மற்றும் வெள்ளெழுத்துக் குறைபாடுகள் விலகி கண் பார்வை தெளிவாகும்.
  • மூக்கிரட்டை, சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மிளகு, சீரகம், திப்பிலி இவற்றை சம அளவில் எடுத்து தூளாக்கி, தினமும் இருவேளை தேனில் கலந்து சாப்பிட்டு வர உடல் எடை குறைந்து உடல் வனப்பாக காணப்படும்.
  • மூக்கிரட்டை, சமூலம் எனும் முழுச் செடியையும் உலர்த்தி, தூளாக்கி, தினமும் இரு வேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கி உடல் புத்துணர்வாகி, இளமைப்பொலிவுடன் காணப்படும்.
  • மூக்கிரட்டை இலைகளை சுத்தம் செய்து சமைத்து சாப்பிட்டு வர சுவாச பாதிப்புகள் சரியாகும்.
  • மூக்கிரட்டை வேர்கள் சற்று நீளமாக சிறிய மரவள்ளிக் கிழங்கு போல காணப்படும். இரத்தச் சோகை, இதய பாதிப்புகள் போன்ற வியாதிகளுக்கு இது சிறந்த மருந்தாகிறது. மூக்கிரட்டை வேரை நீரில் போட்டு நன்றாக வேகவைத்து பின் ஆறியவுடன் அதை பருகி வர, இரத்த சோகை, சளித் தொல்லை நீங்கும்.
  • மூக்கிரட்டை வேரை சற்று இடித்து, விளக்கெண்ணையில் இட்டு காய்ச்சி, காலையில் வெறும் வயிற்றில் பருகி வர, வயிற்றுப் போக்கு ஏற்படும். இதன் மூலம், உடலில் சேர்ந்து இருந்த நச்சு நீர், நச்சுக்கிருமிகள் எல்லாம் மலத்துடன் வெளியேறி விடும். இதுநாள் வரை இந்த நச்சுக்களால், உடலில் ஏற்பட்டிருந்த சரும வியாதிகள், அரிப்பு மற்றும் வாதம் சார்ந்த வியாதிகள் அனைத்தும் சரியாகி விடும்.
  • உடலில் வியாதிகளால் ஏற்பட்ட நச்சு நீரால், சளியும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு, அவை தினசரி இயல்பு வாழ்க்கையை பாதிக்கும். இதை சரி செய்ய, முன் சொன்ன முறையில் காய்ச்சிய மூக்கிரட்டை வேர் நீரில் சிறிது மிளகுத்தூள் கலந்து பருக மூச்சுத் திணறல் பாதிப்புகள் சரியாகி விடும்.

Mookirattai Nanmaigal/ 'மூக்கிரட்டை கீரை'

₹90.00Price
Quantity
    bottom of page