top of page

3 முக ருத்ராட்சம் பலன்கள் குழந்தை பாக்கியம் திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தால் தான் அவர்களின் தாம்பத்திய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறுகிறது. தற்காலங்களில் திருமணம் ஆகியும் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படும் நிலை பல தம்பதிகளிடம் அதிகம் காணப்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் 3 முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் அவர்களின் உடலில் ஏற்படும் பாலியல் ரீதியான குறைபாடுகள் நீங்கப் பெற்று, விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க பெறுவார்கள்.

செவ்வாய் கிரகம் ஒரு மனிதனின் ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் நல்ல நிலையில் இருக்கும் பட்சத்தில் அவருக்கு எதற்கும் அஞ்சாத குணமும், ரத்தத்தில் நோய் எதிர்ப்பு ஆற்றல் மிக்க வீரிய சக்தியும், உடன்பிறந்தவர்களால் நன்மை பெறும் பாக்கியமும் உண்டாகும். ஜாதகத்தில் செவ்வாய் பாதகமாக இருக்கும் பட்சத்தில் செவ்வாய் தோஷம், தைரிய குறைவு, ரத்த புற்று போன்ற பல குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகிறது. செவ்வாய் தோஷம் நீங்கவும், செவ்வாய் பகவானின் அருள் பெறவும் மூன்று முக ருத்ராட்சம் அணிந்து கொள்வது நல்லது.

விபத்துக்கள் நமது கர்ம வினை மற்றும் ஜாதகத்தில் கிரகங்களின் பாதகமான கோச்சார நிலைகளால் நமக்கு எதிர்பாராத விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. இத்தகைய எதிர்பாராத விபத்துக்கள், ஆபத்துக்கள் ஏற்படாமல் நம்மைக் காத்துக்கொள்ள மூன்று முக ருத்ராட்சத்தை எப்போதும் அணிந்து கொள்வது நல்லது

3 mukhi rudraksha ( 3 முக ருட்ராட்சம்)

₹499.00Price
Quantity
    bottom of page